உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதவரம் வரை மெட்ரோ ரயில் விட கோரிக்கை

மாதவரம் வரை மெட்ரோ ரயில் விட கோரிக்கை

திருவொற்றியூர்:மணலி - சேக்காடு பொது வியாபாரி சங்கம் ஆண்டு விழா, அதன் தலைவர் சண்முகம் தலைமையில் நடந்தது.இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன், பசுமை தீர்ப்பாயம் நீதிபதி ஜோதிமணி, நீதித்துறை நடுவர் வேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.வியாபாரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மணலியில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதால், மெட்ரோ ரயில் திட்டத்தை, திருவொற்றியூரில் இருந்து மணலி மார்க்கமாக மாதவரம் வரை இணைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை