உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை:தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காற்றாலை, சூரியசக்தி, நீர் மின்சாரத்தை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்திற்கு தனி நிறுவனம், அனல் மின் நிலையங்களுக்கு தனி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மின்வாரியத்தின் கடன் சுமையை அதிகரிக்கச் செய்யும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்திற்கான அரசாணையை கைவிட வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ