உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினமலர் செய்தி எதிரொலி - பழுதடைந்த சிக்னல் சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி - பழுதடைந்த சிக்னல் சீரமைப்பு

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் முதல் 'ஆன்-ஸ்ட்ரீட் பார்முலா 4' கார் பந்தயத்தை, கடந்த ஆண்டு ஆக., 31, செப்., 1ம் தேதி தீவுத்திடல் சுற்றியுள்ள சாலைகளில் நடத்தியது.போட்டிக்காக, புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன. அப்போது, அண்ணாசாலை - பல்லவன் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் விளக்குகளுக்கான வடம் சேதமானது.இது சேதமடைந்து ஏழு மாதங்களாகியும், வடங்கள் சீரமைக்காததால், வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்திற்கு வழிவகுத்தன.இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, வடங்கள் சீரமைக்கப்பட்டு, சிக்னல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ