உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி புது பஸ் நிலையங்களில் கட்டாயம்

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி புது பஸ் நிலையங்களில் கட்டாயம்

சென்னை, சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தை மாற்றுத்திறனாளிகள் தடையின்றி பயன்படுத்துவதற்கான வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பின்னணியில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவு: சி.எம்.டி.ஏ., சார்பில் பல்வேறு இடங்களில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் முறையாக இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பு நிலையிலேயே இதை கடைப்பிடிக்க வேண்டும். இந்த வசதிகள் முறையாக உள்ளதா என்பதை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வல்லுனர்களின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரின் இந்த உத்தரவால், அனைத்து வகை கட்டமைப்பு திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை