உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதவரம் சாலைகளில் பொத்தல் குடிநீர் வாரிய செயலால் அதிருப்தி

மாதவரம் சாலைகளில் பொத்தல் குடிநீர் வாரிய செயலால் அதிருப்தி

சென்னை, சென்னை மாநகராட்சியில், ஜி.என்.டி., சாலை, மாதவரம் நெடுஞ்சாலை உட்பட 280 கி.மீ., சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது.கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த இந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறை தற்காலிகமாக சீரமைத்து உள்ளது.தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில், திடீரென்று பல சாலைகளை தோண்டி, அவற்றில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான முன்வார்ப்பு கான்கிரீட் கட்டமைப்புகளை, சென்னை குடிநீர் வாரியம் புதைத்து வருகிறது.இதற்காக, பல சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி பணிகள் முடிந்தபிறகும், இணைப்பு போடுவதற்கான பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளன. இதை காரணம் காட்டி, அந்த சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளன.முன்பு இதுபோன்ற பணிகள் முடிந்த பின், நெடுஞ்சாலைத் துறை வாயிலாக சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.ஆனால் தற்போது, குடிநீர் வாரியம் பணியை முடித்தபின், அதன் வாயிலாகவே சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.ஆனால், இந்த நிதியை பயன்படுத்தி, சாலைகளை சீரமைக்க குடிநீர் வாரியம் ஆர்வம் காட்டவில்லை. இதனால், குடிநீர் வாரியம் மீது நெடுஞ்சாலைத் துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஜி.என்.டி., சாலை, மாதவரம் நெடுஞ்சாலையில், தோண்டப்பட்ட பள்ளங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இச்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்களும் தள்ளாடுகின்றன.இதனால், பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன், இச்சாலைகளை முழுமையாக சீரமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை