உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாவட்ட செஸ் போட்டி: மாணவர்கள் அசத்தல்

மாவட்ட செஸ் போட்டி: மாணவர்கள் அசத்தல்

திருப்போரூர், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பில், மாவட்ட செஸ் போட்டி, திருப்போரூர் ஆறுபடை வீடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது.அதில், 11, 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.இதில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், பல்லாவரம் செயின்ட் செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கிஷோர் முதலிடம், தாம்பரம் ஆனந்த் ஜெயின் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரீஷ்வரன் இரண்டாமிடம், பல்லாவரம் எம்.எம்.ஏ.ஜி., மேல்நிலைப்பள்ளி மாணவர் சூரிய பிரகாஷ் மூன்றாமிடம் பிடித்தனர்.அதேபோல், 17 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ராகவிஸ்ரீ முதலிடம், தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசல்யா இரண்டாமிடம், கீழ்க்கட்டளை ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரித்திகா மூன்றாமிடம் பிடித்தனர்.இவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்து, வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசு கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ