மேலும் செய்திகள்
நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு
06-Apr-2025
திருவொற்றியூர்,:சென்னை வடகிழக்கு மாவட்டம் இளைஞரணி சார்பில், திருவொற்றியூரில் 10க்கும் மேற்பட்ட இடங்கள் உட்பட, 37 இடங்களில், தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது.இதில், சென்னை வடகிழக்கு தி.மு.க., மாவட்ட செயலர் சுதர்சனம் பங்கேற்று, தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். அவரை வரவேற்கும் விதமாக தொண்டர்கள் புடைசூழ சொகுசு கார்களில் வந்தனர். அவர்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலையொட்டி வழிநெடுகே சாலைகளை மறித்து, கண்டமேனிக்கு வாகனங்களை நிறுத்தி சென்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கொளுத்தும் வெயிலில், நெரிசலில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்து பயணியர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
06-Apr-2025