உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் ஸ்தம்பித்தது போக்குவரத்து

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் ஸ்தம்பித்தது போக்குவரத்து

திருவொற்றியூர், அம்பேத்கரை ஒருமையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, நாடு முழுதும் போராட்டம் நடக்கிறது. அந்தவகையில், கொளத்துார், திரு.வி.க., நகர் பேருந்து நிலையம் அருகே தி.மு.க., பகுதி செயலர் ஐ.சி.எப்., முரளி தலைமையிலும், பெரவள்ளூர் சதுக்கம் அருகே தி.மு.க., பகுதி செயலர் நாகராஜன் தலைமையிலும், பட்டாளம் பகுதியில் தி.மு.க., - எம்.எல்.ஏ., தாயகம் கவி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.ஓட்டேரியில் குக்ஸ் சாலை மேம்பாலம் அருகே சென்னை மேயர் பிரியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவொற்றியூரில் தேரடி தபால் நிலையம் அருகே, எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் தலைமையிலும், புதுவண்ணாரப்பேட்டையில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், போக்குவரத்து ஸ்தம்பித்து மாணவ - மாணவியர், வேலைகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கிழிந்து விழுந்த பேனர்

தாம்பரத்தில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பேனர் கிழிந்து, மேடை மீது விழுந்தது.இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை