உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேற்கு மாம்பலத்தில் வடிகால் பணிகள் துவக்கம்

மேற்கு மாம்பலத்தில் வடிகால் பணிகள் துவக்கம்

மேற்கு மாம்பலம், 'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் பெய்த கனமழையில் குளம் போல் மாறிய தம்பையா சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது. கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலத்தில் தம்பையா சாலை உள்ளது. இது தி.நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பெய்த கன மழையில், தம்பையா சாலை சீனிவாச தெரு சந்திப்பில், குளம் போல் மழைநீர் தேங்கி, குடியிருப்புகளிலும் புகுந்தது.கோடம்பாக்கம் மண்டலத்தில் கடந்த 2021 மழைக்குப் பின், மண்டலம் முழுதும் 188 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 43 கோடி ரூபாய்க்கு 9.2 கி.மீ., துாரத்திற்கு, 30 சாலைகளில் மழைநீர் வடிகால் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.இதில் அசோக் நகர், 7,8,9 அவென்யூக்கள், வடபழனி என்.ஜி.ஓ., காலனி, மேற்கு மாம்பலம் தம்பையா சாலை, பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுகின்றன.இதில், விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கடந்த மழையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட தம்பையா சாலையில், பிருந்தாவன் தெரு சந்திப்பில் இருந்து லேக் வியூ சாலை சந்திப்பு வரை, 800 மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த மழைநீர் வடிகாலில் இருந்து வெளியேறும் மழைநீர், ரெட்டி குப்பம் கால்வாயில் வெளியேறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்