உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஓட்டுநருக்கு மயக்கம் தடுப்பில் மோதிய பஸ்

 ஓட்டுநருக்கு மயக்கம் தடுப்பில் மோதிய பஸ்

கோயம்பேடு: பணிமனைக்கு பேருந்தை ஒட்டி வரும்போது, ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்படவே, தடுப்பில் மோதி விபத்திற்கு உள்ளானது. பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் தடம் எண்: 597ஏ மாநகர பேருந்து, நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, பூந்தமல்லி பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த பேருந்தை, ராணிப்பேட்டையைச் சேர்ந்த பழனி, 50, என்பவர் ஓட்டி சென்றார். கோயம்பேடு சந்தை பி சாலையில் திரும்பியபோது, ஓட்டுநர் பழனிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை தடுப்பில் மோதி நின்றது. அங்கிருந்தவர்கள் ஓட்டுநர் பழனியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி