உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமி பலாத்காரம்: ஓட்டுனருக்கு சிறை

சிறுமி பலாத்காரம்: ஓட்டுனருக்கு சிறை

செங்கல்பட்டு,தாம்பரம் காவல் மண்டலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 2008ம் ஆண்டு, வீட்டில் தனியாக இருந்தபோது, செய்யூர் அடுத்த புத்துார் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 41, என்பவர், ஆட்டோவில் கடத்திச் சென்றார்.வண்டலுார் அடுத்த இரணியம்மன் கோவிலில் திருமணம் செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து, சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரையடுத்து, சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மணிகண்டனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.அதன்பின், அவரை செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி