உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஆட்டோ மீது பனை மரம் விழுந்ததில் ஓட்டுநர் பலி

 ஆட்டோ மீது பனை மரம் விழுந்ததில் ஓட்டுநர் பலி

அயனாவரம்: சாலையில் சென்ற ஆட்டோ மீது, பனை மரம் விழுந்ததில், அதன் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோவில் பயணித்த மாணவி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல் வாஹித், 38; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று மதியம், நுங்கம்பாக்கத்தில் தனியார் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவியை சவாரி ஏற்றி, அயனாவரம் சாலை வழியே, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருந்த கரையான் அரித்த பனைமரம் ஒன்று, சாலையில் சென்ற ஆட்டோவின் முன்பக்கம் விழுந்தது. இதில் ஓட்டுநர் அப்துல் வாஹித், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மாணவி, காயமின்றி தப்பினார். ஆட்டோவும் சேதமடைந்தது. ஓட்டுநரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை