உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடத்துநரை தாக்கிய போதை ஆசாமி

நடத்துநரை தாக்கிய போதை ஆசாமி

புளியந்தோப்பு, மணலியில் இருந்து பாரிமுனை செல்லும் தடம் எண்: 64சி பேருந்து, நேற்று முன்தினம் மாலை மணலியில் இருந்து புறப்பட்டது. அதில், ஓட்டுநர் ஹரிஹரன், நடத்துநர் பிரேம்குமார் ஆகியோர் பணியில் இருந்தனர்.பேருந்து, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில், புளியந்தோப்பு காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அங்கு, மது போதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்தில் ஏற முயன்றுள்ளார்.நடத்துநர் பிரேம்குமார், போதை நபரை ஏறவிடாமல் தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த அவர், பிரேம்குமாரை பேருந்தில் இருந்து இழுத்து வெளியே தள்ளிவிட்டுள்ளார். இதில், டிக்கெட் கொடுக்கும் மிஷின் உடைந்தது. பிரேம்குமாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அந்த நபர் அதீத போதையில் இருந்ததால், அவரது உறவினர்களை வரவழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை