உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மனைவியின் தலையை சுவரில் மோதி கொலை செய்த போதை கணவன் கைது

 மனைவியின் தலையை சுவரில் மோதி கொலை செய்த போதை கணவன் கைது

போரூர்: மது போதை தகராறில், மனைவின் தலையை சுவரில் மோதி கொலை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர். போரூர், ஆர்.இ., நகரைச் சேர்ந்தவர் சத்யராஜ், 40; கார் ஓட்டுநர். இவரது மனைவி ரோசி, 35. இவர்களுக்கு, சூர்யா, 9 மற்றும் நித்யா, 7, என, இரு குழந்தைகள் உள்ளன. குடி பழக்கத்திற்கு அடிமையான சத்யராஜ், இம்மாதம் 24ம் தேதி இரவு, மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார். அவரது தலையை பிடித்து சுவரில் வேகமாக மோதியுள்ளார். இதில் ரோசி மயங்கியதும், அன்று இரவு முழுதும் வீட்டில் இருந்த சத்யராஜ், அடுத்த நாள் அதிகாலையில் வெளியேறினார். கிறிஸ்துமஸ் தினமான அன்று, ரோசியின் இரு குழந்தைகளும், அப்பகுதியில் உள்ள ரோசியின் அக்கா வீட்டிற்கு தனியாக சென்றுள்ளனர். அங்கு, அப்பா - அம்மா இடையே சண்டை நடந்ததும், அதில் அடிபட்ட அம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அங்கு சென்ற உறவினர்கள் மயங்கி கிடந்த ரோசியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. போரூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆதம்பாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த சத்யராஜை, நேற்று கைது செய்தனர். மது போதையில், ரோசியின் தலையை பிடித்து சுவரில் வேகமாக மோதியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை