மேலும் செய்திகள்
பொது// கஞ்சா விற்ற இருவர் சிக்கினர்
09-Jan-2025
பெரம்பூர், பெரம்பூர், நீலம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்,22. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் வெளியே மது அருந்தி, சாலையில் போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தகவலின்படி, அங்கு சென்ற திரு.வி.க.நகர் போலீசார், ரகளை செய்த நபரை சோதனையிட்ட போது, பாக்கெட்டில் கஞ்சா இருந்தது தெரிந்தது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில், 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பிரவீன் மற்றும் இவருக்கு கஞ்சா விற்ற மாதவரத்தைச் சேர்ந்த லோகேஷ்,23 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
09-Jan-2025