ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் 64 ; காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர், நேற்று காலை பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.ஆவடி ரயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.