கார் மோதி மூதாட்டி மரணம்
சென்னை: தேனாம்பேட்டை, பத்ரிகரை கார்ப்பரேஷன் தெருவைச் சேர்ந்தவர் செல்லம்மாள், 78. அவரும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், 72, என்பவரும், நேற்று முன்தினம் இரவு, வித்யோதயா பிரதான சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த 'போர்டு' கார், மோதி இருவரும் படுகாயமடைந்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், நேற்று காலை செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் ஓட்டுநர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த லோகநாதன், 24, கைது செய்யப்பட்டார்.