மேலும் செய்திகள்
மினி மாரத்தான் போட்டி
27-Jun-2025
சென்னை, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.அதற்காக, இந்தாண்டு முதல், ஸ்மார்ட் எனர்ஜி பாதுகாப்பான நாடு' என்ற கருப்பொருளுடன், ஜூன் இறுதி மற்றும் ஜூலை மாத முதல் வாரம் வரை, தேசிய மின்சார பாதுகாப்பு வாரத்தை அனுசரித்தது.இதன் நோக்கமே, மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன்,மின்சார வாகனங்கள், மின்கலன் ஆற்றல் சேமிப்பு, சூரிய ஒளி மின்சார கட்டமைப்புகள் குறித்தும், அவற்றின்பாதுகாப்பு குறித்தும், மக்களுக்கு தெரியப்படுத்துவதாகும்.குறிப்பாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், மாற்று வழிகளில் மின்சார உற்பத்தி செய்வது, அதற்குரிய அரசு மானியம் போன்ற விபரங்களும், இந்த வாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
27-Jun-2025