பணிக்கு சேர்ந்த மறுநாளே ஊழியர் கைவரிசை
சென்னை, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சபீர், 36 என்பவர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிக்கிறார். அண்ணாசாலையில் உணவகம் நடத்தி வருகிறார். தனது முகநுால் பக்கத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என, சபீர் பதிவிட்டு இருந்தார்.இதை பார்த்த கேரளா மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜெயமோகன் என்பவர், நேற்று சபீரை நேரில் சந்தித்து பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில் நேற்று காலை, சபீரின் இருசக்கர வாகனம் திருடுபோனது. கடைக்கு சென்று பார்த்தபோது, கல்லாவிலிருந்த 25,000 ரூபாயை காணவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்த்தபோது, புதிதாக பணிக்கு சேர்ந்த ஜெயமோகன், கடை திறந்து பணத்தை திருடியது பதிவாகி இருந்தது. புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.