உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வைரத்தின் தரத்தை உறுதி செய்யுங்கள்

வைரத்தின் தரத்தை உறுதி செய்யுங்கள்

சென்னை, ''வைர நகைகள் வாங்குவோர், அவற்றின் தரத்தை உறுதி செய்து கொள்வது அவசியம்,'' என, 'டீ பீர்ஸ்' நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அமித்பிரதிஹாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:இயற்கை வைரங்கள் காலத்திற்கும் அப்பாற்பட்ட புதையல். இந்திய வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கும் வைரங்கள், இயற்கை மற்றும் அசல் வைரங்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். வைரங்களுக்கு காலத்திற்கும் அப்பாற்பட்ட மதிப்பு இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.வைரங்கள் காதல் மற்றும் அர்பணிப்பை வெளிப்படுத்தும் முக்கிய பொருளாக மாறியுள்ளது. நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட பல்வேறு மகிழ்ச்சியான நிகழ்வுகளில், வைரம் பிரதான இடத்தை பெறுகிறது. இந்திய பெண்கள், வைரங்களை அன்பளிப்பாகவும், தனக்கான பொருளாகவும் பார்க்கின்றனர். பல பெண்கள், தங்கள் சாதனைகளுக்கான வெகுமதியாக கருதுகின்றனர்.நவாப் மற்றும் மகாராஜாக்கள் காலத்தில் இருந்தே, இந்தியர்கள் வைரங்களை கவுரவமான, காலத்துக்கும் அப்பாற்பட்ட, மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகிறது. அந்த மரபு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.இவ்வாறு அமித்பிரதிஹாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ