உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சித்தாவுக்கு தனி கட்டடம் வளசையில் எதிர்பார்ப்பு

சித்தாவுக்கு தனி கட்டடம் வளசையில் எதிர்பார்ப்பு

சின்ன போரூர், வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு, சின்ன போரூரில், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை உள்ளது.இங்கு, மகப்பேறு, ஆலோசனை மையம், தீவிர சிகிச்சை, சித்த மருத்துவம் உட்பட பல பிரிவுகள் உள்ளன. பிரசவம் மற்றும் பரிசோதனைக்காக தினமும், 300க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.இதில், சித்த மருத்துவ பிரிவிற்கு மட்டும் 60 - 70 பேர் வந்து செல்கின்றனர். அங்கு, போதிய இடவசதியின்றி, சிறிய அறையில் செயல்படுகிறது.அதனால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள காலி இடங்களில், சித்த மருத்துவத்திற்கென தனி கட்டடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சித்த மருத்துவ கட்டடம் தனியாக இருந்தால், அரசிடம் இருந்து பல்வேறு சலுகைகள் மருத்துவமனைக்கு கிடைக்கும் என, மருத்துவர்களும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை