உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விரைவு சாலை வாகன ஓட்டிகள் அச்சம்

விரைவு சாலை வாகன ஓட்டிகள் அச்சம்

கும்மிருட்டான விரைவு சாலை வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை, மணலி, எம்.எப்.எல்., சந்திப்பு துவங்கி, திருவொற்றியூர், முருகப்பா நகர் சந்திப்பு வரை, 200க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன.இச்சாலையில், கன்டெய்னர், டிரெய்லர் லாரி போக்குவரத்து மிகுதியாக இருக்கும். இந்நிலையில், அவ்வப்போது, தெருவிளக்குகள் எரியாமல், இச்சாலை இருளில் மூழ்கியிருப்பதால், விபத்து அச்சம் நிலவி வருகிறது.கனரக வாகன ஓட்டிகள், டூ - வீலர் மற்றும் இலகுரக வாகனங்கள் தெரியாமல், மோதி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். தெருவிளக்குகளை பராமரிக்கும், மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் கவனித்து, பிரச்னை உரிய தீர்வு காண வேண்டும். - எழிலரசன், 35, தனியார் நிறுவன ஊழியர், மணலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ