முதல்வர் கோப்பை போட்டிகள் முன்திவுக்கு அவகாசம் நீட்டிப்பு
சென்னை, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லுாரி, பொது, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில் நடக்க உள்ளன. மாவட்ட அளவில், ஐந்து பிரிவுகளில், 25 விளையாட்டுகளும், மண்டல அளவில் ஏழு வகையான போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான போட்டிகளும் நடக்கின்றன. இப்போட்டிகள், இம்மாதம் துவங்கி, செப்., மாதம் வரை நடக்கின்றன. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், https://smtrophy.sdat.inமற்றும் https://sdat.tn.gov.inஆகிய இணைதளங்களில் பதிவு செய்ய வேண்டும். நேற்று மாலையுடன் முன்பதிவு நிறைவடைந்ததால், இம்மாதம் 20ம் தேதி, இரவு 8:00 மணி வரை, மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தோர் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். விபரங்களுக்கு, 74017 03480 என்ற எண்ணில், மாவட்ட நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.