உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஐ.,யை தாக்கிய தந்தை, மகன்கள் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய தந்தை, மகன்கள் கைது

ஓட்டேரி:புரசைவாக்கம், மூக்காத்தாள் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 41. ஓட்டேரி, கிருஷ்ணதாஸ் பிரதான சாலை பகுதியில், இவருக்கு சொந்தமான வீட்டில், ருபுஸ் டவிஸ், 49, என்பவர், மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன், கடந்த 2022ம் ஆண்டு வாடகைக்கு குடிவந்துள்ளார்.இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக ருபுஸ் டவிஸ் வாடகை கொடுக்கவில்லை என தெரிகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள பொது இடத்தில் கோழி வளர்த்து வந்தது குறித்து, கார்த்திக் கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு ருபுஸ் டவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், கார்த்திக்கை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து, ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். அதன்படி, உதவி ஆய்வாளர் உமாபதி, போலீஸ்காரர் நிஜீத் ஆகியோர், ருபுஸ் டவிஸ் தங்கியுள்ள கார்த்திக்கின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் இரவு சென்று விசாரித்துள்ளனர்.அப்போது, உதவி ஆய்வாளர் உமாபதியை, ருபுஸ் டவிஸ் மற்றும் அவரது மகன்கள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த உமாபதி, பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, ருபுஸ் டவிஸ் அவரது மகன்கள், டார்வின், 25, டால்டன் சாமுவேல், 20, ஆகியோரை, கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !