உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பீர் பாட்டிலால் குத்தி மகனை கொன்ற தந்தை

பீர் பாட்டிலால் குத்தி மகனை கொன்ற தந்தை

குன்றத்துார், குன்றத்துார் அருகே, மாங்காடு அம்மாள் நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 75; ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் குமரன், 38.மது பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் போதையில் வீட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இவரது மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். தந்தையுடன் வசித்து வந்த குமரன், நேற்று முன்தினம் இரவு, மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். தட்சிணாமூர்த்தியும் மதுபோதையில் இருந்ததால், அவர்களுக்குள் கைகலப்பானது.இதையடுத்து, பீர் பாட்டிலை எடுத்து, குமரன் தலையில் அடித்தோடு, உடைந்த கண்ணாடியால் அவரை குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த குமரன், சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று காலை போதை தெளிந்து தட்சிணாமூர்த்தி எழுந்தபோது, மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது அவருக்கு தெரிந்தது. இதுகுறித்து, மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து, தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை