உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடி மனைவிக்கு அபராதம்

ரவுடி மனைவிக்கு அபராதம்

சென்னை,பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி நாகேந்திரன், உடல் நல குறைவால், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி விசாலாட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மனுதாரர், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திலும், இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்துள்ளார். 'விசாரணை நீதிமன்ற விபரங்களை மறைத்ததற்காக, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ