உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.சி.எப்., ஆலையில் தீ விபத்து

ஐ.சி.எப்., ஆலையில் தீ விபத்து

ஐ.சி.எப்., ஐ.சி.எப்., பகுதியில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுகிறது. இதில், கொன்னுார் நெடுஞ்சாலையில் இயங்கும், 'ஷெல்' தொழிற்சாலையின் அருகில், நிர்வாக கட்டடத்தின் முன்புறத்தில் பைக் நிறுத்தும் இடம் உள்ளது.இந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்த காய்ந்த மரக்கிளைகளில் நேற்று முன்தினம் இரவு, தீடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது.தகவலறிந்து வந்த ஐ.சி.எப்., நிர்வாகத்தின் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், எவ்வித சேதமும் ஏற்படாமல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை