உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை கிடங்கில் தீ விபத்து

குப்பை கிடங்கில் தீ விபத்து

அய்யப்பன்தாங்கல், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள சுடுகாடு அருகே, சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான காலி இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.கடும் வெயிலால் குப்பை அனைத்தும் காய்ந்த கிடந்த நிலையில், நேற்று இரவு திடீரென குப்பை தீப்பிடித்து எரிந்தது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அந்த பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.அருகிலிருந்த குடியிருப்புவாசிகள், தனியார் மருத்துவமனை நோயாளிகள் அவதிப்பட்டனர்.தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை