உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல் டிவிஷன் கால்பந்து வருவாய் துறை அணி அபாரம்

முதல் டிவிஷன் கால்பந்து வருவாய் துறை அணி அபாரம்

சென்னை, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில், சென்னை கால்பந்து அமைப்பு சார்பில் ஆடவருக்கான முதல் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில், வருவாய் துறை, மெட்ராஸ் போஸ்டல் அணிகள் மோதின.போட்டி துவங்கிய முதல் நிமிடத்தில், வருவாய் துறை அணியின் ரசூல், தன் அணிக்காக முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 6வது நிமிடத்தில் மெல்வின்; 10வது நிமிடத்தில் அமீர் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்ட முடிவில் 3 - 0 என்ற கோல் கணக்கில், வருவாய் துறை அணி, வலுவான முன்னணி பெற்றது.இரண்டாவது பாதியில், ஒட்டுமொத்தப் போட்டியை தன்வசப்படுத்திய வருவாய் துறை அணியின் ரசூல் எதிர் அணியின் தடுப்பை உடைத்து, 48வது மற்றும் 50வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல் அடிக்க, வருமான வரித்துறை அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.* மற்றொரு போட்டியில் ஆக்டோபஸ் மரைன் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் டி.பி.ஒய்.சி., பேசின்பாலம் அணியை வென்றது. ஆக்டோபஸ் மரைன் அணி சார்பில் 17வது நிமிடத்தில் வசந்த் ஒரு கோல். 54வது மற்றும் 79வது நிமிடத்தில் மனோஜ் குமார் இரண்டு கோல் அடித்தனர். டி.பி.ஒய்.சி., பேசின்பாலம் அணி சார்பில், 36வது நிமிடத்தில் சரவணன் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ