| ADDED : நவ 17, 2025 03:22 AM
காசிமேடு: அதிகா லையே குவிந்த மீ ன் பிரியர்களால், காசிமேடு மீன் சந்தை நேற்று களை கட்டியது. கார்த்திகை மாதத்தில் ஏராளானோர் விரதம் துவங்குவது வழக்கம். குறிப்பாக, அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பர். கார்த் திகை மாதம் இன்று துவங்கிய நிலையில், ஐப் பசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அதிகாலை முதலே காசிமேடு மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேவேளையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. மீன்வரத்தும் அதிகரித்தது. வாளை, கானாங்கத்த மீன் வகைகள் அதிகளவில் குவிந்தன. மீன் வரத்து அதிகம் இருந்தும், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், மீன் விலை அதிக ரித்து காணப்பட்டது. மீன் விலை நிலவரம் வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 900 - 1,000 கறுப்பு வவ்வால் 800 - 900 வெள்ளை வவ்வால் 900 - 1,000 ஐ வவ்வால் 1,400 - 1,500 பாறை 400 - 500 சங்கரா 300 - 350 கடல் விரால் 500 - 600 சீலா 450 - 500 சூரை 200 - 250 பர்லா 300 - 350 நெத்திலி 250 - 300 மயில் கோலா 200 - 250 காரல் 250 - 300 கானாங்கத்த 150 - 200 வாளை 100 - 150 கடம்பா 250 - 300 நண்டு 300 - 350 வரி நண்டு 500 - 600 இறால் 300 - 350