உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காசிமேடில் மீன் விலை சரிவு

 காசிமேடில் மீன் விலை சரிவு

காசிமேடு: காசிமேடில் வரத்து அதிகரிப்பால், கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் மீன் விலை சற்று குறைவாக இருந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கடலுக்குள் நேற்று மீன்பிடிக்க சென்ற 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. குறிப்பாக, கானாங்கத்த மீன் வரத்து அதிகம் இருந்தது. இதனால், கடந்த வாரங்களில் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கானாங்கத்த மீன், நேற்று 150 - 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற மீன் வகைகளின் வரத்து சற்று அதிகமாக இருந்ததால், கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் விலை சற்று குறைவாக இருந்தது. மீன் விலை நிலவரம் வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 800 - 900 கறுப்பு வவ்வால் 800 - 900 வெள்ளை வவ்வால் 900 - 1,000 பாறை 500 - 600 சங்கரா 300 - 400 நெத்திலி 300 - 400 வாளை 100 - 200 கடம்பா 300 - 400 நண்டு 350 - 400 வரி நண்டு 500 - 600 இறால் 250 - 400 டைகர் இறால் 800 - 900


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி