உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடிகால்வாய் அடைப்புகளால் திடீர் மழைக்கு வெள்ள பாதிப்பு

வடிகால்வாய் அடைப்புகளால் திடீர் மழைக்கு வெள்ள பாதிப்பு

சென்னை: வடிகால்வாய்களில் அடைப்புகளால், சென்னையில் நேற்று மாலை பெய்த மழைக்கு, பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சென்னையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை திடீரென ஒரு மணி நேரம் வரை, பல இடங்களில் மழை பெய்தது. கிண்டி, வேளச்சேரி, தரமணி, ஆதம்பாக்கம், நங்கநல்லுார் பகுதிகளில், சாலையில் வெள்ளம் ஆறாக ஓடும் அளவுக்கு மழை பெய்தது. பல இடங்களில், வடிகால்வாய்களில் மழைநீர் செல்லவில்லை. குறிப்பாக, வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்பேத்கர் நகர், அஷ்டலட்சுமி நகர், பாலாஜி காலனி, சிட்டி லிங்க் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது. சில பகுதியில் வடிகால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, மழைநீர் வெளியேறாமல் மணிக்கணக்கில் தேங்கி நின்றது. இதனால், அப்பகுதியில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை