உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேலோ இந்தியா விழிப்புணர்வு: மெரினாவில் விளையாட்டு

கேலோ இந்தியா விழிப்புணர்வு: மெரினாவில் விளையாட்டு

சென்னை சென்னையில், ஆறாவது 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகள், நாளை துவங்குகின்றன.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கும் இப்போட்டிகள் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும், வரும் 31ம் தேதி வரை நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில், போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக, விளம்பர ஊர்திகள் மாநில முழுதும் சுற்றுப்பயணம் சென்றுள்ளது.இவ்வாகனம் செல்லும் இடங்களில், போட்டியின் இலச்சினையான 'வீர மங்கை' லோகோ வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அந்த வகையில், காணும் பொங்கலை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர்.கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு பலவித போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. கடற்கரையில் திரண்ட மக்கள், 'வீர மங்கை' இலச்சினையுடன் மொபைல் போனில் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை