உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரோம்பேட்டையில் விநாயகர் கண்காட்சி

குரோம்பேட்டையில் விநாயகர் கண்காட்சி

தாம்பரம், குரோம்பேட்டையில், விநாயகர் கண்காட்சி நேற்று துவங்கியது. குரோம்பேட்டையை சேர்ந்தவர் கட்டட கலை நிபுணர் சீனிவாசன். தீவிர விநாயகர் பக்தரான இவர், கடந்த 18 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன், இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குரோம்பேட்டை, அனுமார் கோவில் தெருவில், ராமகணேஷ் காம்ப்ளக்ஸில், 22,000 விநாயகர் சிலைகளுடன் கூடிய, 19ம் ஆண்டு விநாயகர் கண்காட்சி நடத்தினர். இதை, அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி, செப்., 7ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை