உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ. 28 லட்சத்தில் கங்கையம்மன் கோவில் குளம் சீரமைப்பு

ரூ. 28 லட்சத்தில் கங்கையம்மன் கோவில் குளம் சீரமைப்பு

மதுரவாயல், மதுரவாயலில் 28 லட்சம் ரூபாய் மதிப்பில், கங்கையம்மன் கோவில் குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் கங்கையம்மன் கோவில் தெருவில், கோவில் குளம் அருகே, கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையடையாததால், இந்த கழிவுநீர் உந்து நிலையத்திற்கு, லாரிகள் மூலம் கழிவுநீர் எடுத்து வரப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு, கழிவு நீர் உந்து நிலையத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி, குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. இதையடுத்து, குளத்தில் கழிவுநீர் வெளியேற்றுவது தடுக்கப்பட்டு, மீண்டும் குளத்தில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், குளத்தில் கரைகள் உடைந்து, தண்ணீர் முழுதும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்பட்டது. இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, 28 லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தை துார்வாரி, கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை