உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரவில் எரிக்கப்படும் குப்பை பரணிபுத்துார்வாசிகள் அவதி

இரவில் எரிக்கப்படும் குப்பை பரணிபுத்துார்வாசிகள் அவதி

போரூர் அருகே புறநகர் பகுதியில், குன்றத்துார் ஒன்றியம், பரணிபுத்துார் ஊராட்சி உள்ளது. இங்கு சேகரமாகும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள், ஜோதி நகர், ஆண்டவர் நகர் பகுதிகளில் கொட்டப்படுகின்றன.இரவு நேரத்தில், அவை தீயிடுவதால் 10 அடி உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிகின்றன. கரும்புகை வீடுகளில் படிவதோடு, சுற்று வட்டார குடியிருப்புவாசிகள் மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர்.இரவில் நிம்மதியாக துாங்க முடியவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் கூறினால் குப்பை அகற்ற வேறு வழியில்லை என்கின்றனர். குப்பை கழிவுகள் எரிக்கப்படுவதை, அதிகாரிகள் தடுக்க வேண்டும்.-மா. பரணிதரன்பரணிபுத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ