பூண்டு விலை சரிவு
சென்னை,மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆன்லைன் இடைத்தரகர்களால், கடந்த சில மாதங்களாக பூண்டு பதுக்கல் அதிகம் இருந்தது. இதனால், வெளிச்சந்தையில் ஒரு கிலோ பூண்டு 450 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, வடமாநிலங்களில் பூண்டு அறுவடை துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, கடந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட முதல்தர பூண்டு 120 ரூபாய்க்கும், இரண்டாம்தர பூண்டு 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.