மேலும் செய்திகள்
சிறு மழைக்கே சகதியான கோயம்பேடு சந்தை வளாகம்
22-Jul-2025
கோயம்பேடு,கோயம்பேடு சந்தைக்கு, எலுமிச்சை வரத்து அதிகரிப்பால், விலை சரிந்து 30 ரூபாய்க்கு விற்பனையானது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து, எலுமிச்சை வரத்து உள்ளது. கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை, தினமும் 300 டன் - 400 டன் எலுமிச்சை பழம் தேவையுள்ளது. கோடைக்காலத்தில் வரத்து குறைவால், கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ எலுமிச்சை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு நேற்று, 600 டன் எலுமிச்சை வந்துள்ளது. அதேவேளையில், விற்பனை மந்தமாக இருந்ததால், கிலோ 30 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகிறது. மேலும், விற்பனையின்றி அழுகி தேங்குவதால், டன் கணக்கில் குப்பையில் கொட்டப்படுகிறது.
22-Jul-2025