உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாயுடன் நடன மாஸ்டருக்கு உறவு கண்டித்த சிறுமிக்கு சித்ரவதை

தாயுடன் நடன மாஸ்டருக்கு உறவு கண்டித்த சிறுமிக்கு சித்ரவதை

வடபழநி:கே.கே.நகரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாய்க்கு 'ஜூம்பா' நடனம் மற்றும் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்க ராயப்பேட்டை, முகமது ஹூசைன் தெருவைச் சேர்ந்த ஷெரிப், 37, என்பவரை அவரது கணவர் நியமித்தார்.பயிற்சியின் போது, சிறுமியின் தாய்க்கும், ஜூம்பா நடன மாஸ்டருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதை சிறுமி கண்டித்து வந்துள்ளார். மேலும் தந்தையிடம் சொல்வதாக எச்சரித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஷெரிப், சிறுமியின் கையை முறுக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், சிறுமியின் பள்ளிக்கு சென்று, சக மாணவர்கள் மத்தியில் சிறுமியை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமியின் தந்தை, ஜனவரி 24ம் தேதி தி.நகர் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த புகார் வடபழனி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார், ஷெரிப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை