உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் தங்கம், வெள்ளி டாலர் விற்பனை

தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் தங்கம், வெள்ளி டாலர் விற்பனை

சென்னை:சித்திரை மாத அமாவாசைக்கு பின் வருகிற திருதியை திதியை, 'அட்சய திருதியை' என அழைக்கிறோம்.இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை, ஏப்., 30ம் தேதி வருகிறது. இந்நாளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட மங்கல பொருட்களை வாங்கினால், அவை பெருகும் என்பது நம்பிக்கை.திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், பல ஆண்டுகளாக தங்க, வெள்ளி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.டாலரின் ஒரு பக்கத்தில் ஏழுமலையான் உருவமும், மற்றொரு பக்கத்தில் பத்மாவதி தாயார் உருவமும் பொறிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், வரும் அட்சய திருதியை முன்னிட்டு, தி.நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வர் கோவிலில், வரும் 30ம் தேதி தங்கம், வெள்ளி டாலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.அன்று காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, தங்கத்தில் 2 கிராம், 5 கிராம், 10 கிராம்களிலும், வெள்ளியில் 5 கிராம், 10 கிராம்களில் டாலர்கள் விற்பனை செய்யப்படும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ