உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பரந்துார் ஏர்போர்ட்டுக்கு நிலம் அடக்கி வாசிக்க அரசு உத்தரவு

 பரந்துார் ஏர்போர்ட்டுக்கு நிலம் அடக்கி வாசிக்க அரசு உத்தரவு

காஞ்சிபுரம்: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், மக்கள் தொடர்ந்து போராடி வரும் ஏகனாபுரத்தில் மட்டும் அதற்கான பணியை துவக்க வேண்டாம் என, வருவாய் துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், 5,320 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. விமான நிலைய திட்ட மதிப்பு, 29,150 கோடி ரூபாய். இதற்காக, 20 கிராமங்களில், 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதுவரை, 1,000 ஏக்கர் வரை நிலம் பெறப்பட்டு, 400 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், ஏகனாபுரம் மக்கள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடியிருப்பு, விவசாய நிலம் என, ஊர் முழுதுமே பாதிக்கப்படுவதே இதற்கு காரணம். 'சட்டசபை தேர்தல் வ ர உள்ளதால், ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டாம்; அடக்கி வாசியுங்கள்' என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், வருவாய் துறை அதிகாரிகள், இந்த விவகாரத்தில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. தேர்தலுக்குபின், ஏகனாபுரம் கிரா மத்திற்கான நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கும் எனவும், வருவாய் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்