உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு ஓய்வு இல்லம் முதல்வர் திறப்பு

அரசு ஓய்வு இல்லம் முதல்வர் திறப்பு

சென்னை, சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், 17 கோடி ரூபாயில் அரசு ஓய்வு இல்லம் கட்டப்பட்டுள்ளது. அரசு அலுவலகப் பணி நிமித்தமாக, சென்னை வரும் அரசு அலுவலர்கள் தங்குவதற்காக, நான்கு தளங்களில், 59 அறைகள் கொண்டதாக, ஓய்வு இல்லம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து அறைகளிலும் 'ஏசி' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய அரசு ஓய்வு இல்லத்தை, முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, பொதுத்துறை செயலர் நந்தகுமார், துணை செயலர் பத்மஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ