உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகர் பெருமாள் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்

தி.நகர் பெருமாள் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்

சென்னை,அயோத்தி ராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை, வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தி.நகர் பெருமாள் கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு, தினசரி ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தமிழக கவர்னர் ரவி தன் மனைவியுடன் தி.நகர் பெருமாள் கோவிலுக்கு வந்தார்.அவரை மலர் கொத்து கொடுத்து டி.டி.டி., தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் வரவேற்றார். பின், கோவில் முகப்பில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையை தரிசித்து, மூலவர் வெங்கடேஷ்வரரையும் வழிபட்டார்.இதையடுத்து, பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியனின் நடனத்தையும் கண்டு ரசித்தார். டி.டி.டி., தமிழக ஆலோசனை குழு தலைவர் சேகர் கூறியதாவது:டி.டி.டி., சார்பில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில், வளரும் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.வரும் 22ம் தேதி தி.நகர் பெருமாள், தாயார் கோவிலில் காலை 7:00 முதல், இரவு 9:00 மணி வரை தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கஉள்ளன; ஏராளமான வேத பண்டிதர்கள் பங்கேற்கின்றனர். அன்று முழுதும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை