உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜி.எஸ்.டி., சாலையில் போராட்டம்

ஜி.எஸ்.டி., சாலையில் போராட்டம்

குரோம்பேட்டை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று காலை, பார்வையற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 'அரசு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும், 4 சதவீத இட ஒதுக்கீட்டில், 1 சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசார் விரைந்து பேச்சு நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், குரோம்பேட்டையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ