உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்ட்ரலில் இருந்து ஜி.டி., ரயில் இயக்கம்

சென்ட்ரலில் இருந்து ஜி.டி., ரயில் இயக்கம்

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்படும் ஜி.டி., எனும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வரும் 9ம் தேதி முதல் அந்த ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:10 மணிக்கு புது டில்லி புறப்படும். புதுடில்லியில் இருந்து வரும் ரயிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை