உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நங்கநல்லுார் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

நங்கநல்லுார் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

சென்னை, சென்னை, நங்கநல்லுார் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவர், சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழக கவர்னர் ரவி, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் ஆஞ்சநேயரை தரிசித்தனர்.இன்று காலை 11:00 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ