மேலும் செய்திகள்
விமானங்கள் தாமதம் பயணியர் தவிப்பு
08-Aug-2025
சென்னை,மும்பையில் கனமழை பெய்து வருவதால், சென்னையில் இருந்து அங்கு செல்ல வேண்டிய விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மும்பையில் இருந்து நேற்று மாலை 5:35 மணிக்கு சென்னை வர வேண்டிய மற்றும் சென்னையில் இருந்து மாலை 6:20 மணிக்கு மும்பை புறப்படும் 'இண்டிகோ' விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மும்பைக்கு அதிகாலை 5:10 மணி, காலை 8:55 மணிக்கு இயக்கப்படும் 'இண்டிகோ' விமானங்களும், காலை 9:35, மாலை 3:00 மணிக்கு இயக்கப்படும் 'ஏர் இந்தியா' விமானங்களும், இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. விமான நிறுவனங்கள் இது குறித்து பயணியருக்கு தகவல் தெரிவித்து, மாற்று விமானத்தில் அனுப்பி வைத்ததாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
08-Aug-2025