உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையை ஆக்கிரமித்த வாகனங்களால் கடும் அவதி

சாலையை ஆக்கிரமித்த வாகனங்களால் கடும் அவதி

மதுரவாயல், மதுரவாயல் எம்.எம்.டி.ஏ., காலனி சாலையில் உள்ள வாகன ஆக்கிரமிப்பால், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.சென்னை, வளசரவாக்கம் மண்டலம், 144வது வார்டு மதுரவாயல் எம்.எம்.டி.ஏ., காலனியில், முதலாவது பிரதான சாலை உள்ளது. இச்சாலையில் மின்வாரிய அலுவலகம் மற்றும் கடைகள் அமைந்துள்ளன.இச்சாலையின் இருபுறத்தை ஆக்கிரமித்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. சில பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து, தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதனால், சாலை குறுகலாகி காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. அதேபோல், இச்சாலை அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு சந்திலும், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.எனவே, சாலையோரம் உள்ள வாகன ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து போலீசாரும், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை