உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குதிரையேற்ற போட்டியாளர்களுக்கு உள்துறை செயலர் அமுதா பாராட்டு

குதிரையேற்ற போட்டியாளர்களுக்கு உள்துறை செயலர் அமுதா பாராட்டு

சென்னை, சென்னையில் முதல் முறையாக புதுப்பேட்டை, குதிரைப்படை வளாகத்தில் குதிரையேற்றப் போட்டி நடக்கிறது. மூன்ற நாட்கள் நடக்கும் போட்டியை, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று, எட்டு அணிகளுக்கு, ஆறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக உள்துறை செயலர் அமுதா பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசுகையில், ''நம் காவல் துறையில் உள்ள குதிரைப்படை மிகவும் பழமையானது. அதில் குதிரையேற்றப் போட்டி நடத்த திட்டமிட்டு, அவற்றை விளையாட்டு துறை அமைச்சர் வாயிலாக செயல்படுத்தி காட்டிய, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோடிற்கு நன்றி. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்,'' என்றார்.நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், இணை கமிஷனர் கயல்விழி, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சஞ்சய் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி