மாநில கூடைப்பந்து போட்டி ஹோப் அகாடமி அணி வெற்றி
சென்னை:சென்னை, மயிலாப்பூரில் உள்ள ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், இந்தியன் வங்கி ஆதரவுடன், தமிழ்நாடு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நேற்று முன்தினம் துவங்கின.இருபாலருக்குமான இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 72 அணிகள், பெண்கள் பிரிவில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள், நேரு விளையாட்டு மைதானத்தில் நடக்கின்றன.இதில், நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான முதல் போட்டியில், ஹோப் அகாடமி அணியுடன், மான்போர்ட் அணி பலப்பரீட்சை நடத்தியது.இரு அணி வீரர்களும், தங்களுக்கான வாய்ப்புகளை புள்ளிகளாக மாற்றியதால், ஆட்டத்தின் இறுதி நொடி வரை பரபரப்பு நிலவியது.ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், மான்போர்ட் அணி வீரர்கள் செய்த சிறு தவறை தங்களுக்கான புள்ளியாக மாற்றிய ஹோப் அகாடமி அணியினர், 76 - 72 என்ற புள்ளிக் கணக்கில் 'திரில்' வெற்றியைப் பெற்றனர்.பெண்களுக்கான ஆட்டத்தில், நெக்சஸ் அணி 39 - 29 என்ற புள்ளிக்கணக்கில் செயின்ட் தாமஸ் அணியை வீழ்த்தியது. அதேபோல், நாகன் நினைவு அணி 62 - 42 என்ற புள்ளிக்கணக்கில் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.